ஸ்தல வரலாறு

ஆதி சக்தியான பிரம்மாண்ட நாயகி, சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் அங்காள பரமேஸ்வரியாக அருள்பாலித்து கருணைத் தாயாக வீற்றிருக்கின்றாள். இதற்காக அவ்விடத்தை அன்னையே தேர்ந்தெடுத்து கோவில் கொண்டு வீற்றிருக்கின்றாள் என்பது மிகவும் அதிசயமான அற்புதமான அருள் வரலாறு ஆகும்.

சுமார் 600 வருடங்களுக்கு முன்னால் நான்கு அன்பர்கள், மைசூரில் அங்காள பரமேஸ்வரியின் ஆழ்ந்த பக்தர்களாக இருந்தனர். கேட்பவர்களுக்கெல்லாம் கேட்கும் வரம் தரும் இந்த அன்னைக்கு நாமே ஓர் ஆலயம் கட்டலாமே என்று அன்னையின் அருளால் தீர்மானித்தனர். அதற்காக மூல சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை அழைத்து வர வேண்டும். அவளின் சக்தி அம்சமாக விளங்கும் புற்றிலிருந்து மண் எடுத்து வந்து, அதோடு மேல் மலையனூரிலேயே சிலையை வடித்துத் கொண்டு வந்து அந்த மூல ஆற்றலோடு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்கள். தொடர்ந்து படிக்க . . .

பூஜை நேரங்கள்

காலை : 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.
மாலை : 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

அபிஷேகம் செய்பவர்கள் காலை 9 மணி வரை பதிவு செய்து அன்றைய தினம் அபிஷேகம் செய்து கொள்ளலாம்.